காடுவெட்டி குரு பாஸ்போர்ட் - பொய் சொன்னாரா அன்புமணி?

வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்த மறைந்த காடுவெட்டி குருவிடம் பாஸ்போர்ட் இல்லை- கஷ்டப்பட்டு பாஸ்போர்ட் வாங்கி அவரை அழைத்துச் செல்ல நினைத்த போது குரு மறுத்துவிட்டார்.

-இதுதான் காடுவெட்டி கிராமத்தில் அன்புமணி பேசியது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் படங்களுடன் வலம் வரும் பதிவு: ஒரு அதிர்ச்சிமிக்க மற்றும் அறியப்பட வேண்டிய அவசர செய்தி. 

மாவீரன் காடுவெட்டி குருவை இன்று இழந்து நாம் வாடிக்கொண்டிருக்கும் வேளையில். மாவீரனை காப்பாற்ற நான் எவ்வளவோ நான் முயன்று விட்டேன். பலமுறை அயல்நாட்டிற்கு அழைப்பு விடுத்த நிலையிலும் அவர் மறுத்து விட்டார் என்றும் அவரிடம் கடவுச் சீட்டே ( பாஸ்போர்ட்) இல்லையென்றும் அப்பட்டமாக சொல்லித் திரியும் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் அன்புமணி அவர்களுக்கு ஒரு அறியத்தக்க செய்தி. 

2025 ம் ஆண்டு வரை அனுமதி இருந்தும் ஏன் இந்த கொள்ளைப் புழுகை சொல்லித் திரிகிறார், புலம்புகிறார் என்றே தெரியவில்லை. 

பல செயல் திட்டங்களை கொண்டுவந்து அமெரிக்க பாணியில் ஏழை பாட்டாளிகளிடம் வேடம் போடும் கூட்டமே கடவுச் சீட்டு எடுப்பது உங்களுக்கு ஒன்றும்  பெரிதல்லவே.

மாறாக அன்புமணியின் ஒற்றை வளர்ச்சிக்காக அல்லும், பகலும்  அரும்பாடுப்பட்ட  எம் மாவீரனையே  மறையச் செய்தது யாருடைய சுயநலத்திற்காக.?

இது தான் உங்களுக்காக உழைத்தவர்களுக்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடனா.

சிந்தியுங்கள்....

நன்றி மறப்பது நன்றன்று மானுடமே...

இவ்வாறு அப்பதிவில் எழுதப்பட்டுள்ளது.

More News >>