இந்த ஆண்டின் டாப் 5 புத்தகங்கள் - இது பில் கேட்ஸ் பரிந்துரை!
உலகின் இரண்டாவது மிகப்பெரிய கோடீஸ்வரரும் மைக்ரோசாஃப்ட் எனும் டெக் சாம்ராஜ்யத்தின் நிறுவனருமான பில் கேட்ஸ், தனது கேட்ஸ்நோட்ஸ் வெப்சைட்டில், இந்த ஆண்டின் சிறந்த ஐந்து புத்தகங்களை பரிந்துரைத்துள்ளார். மேலும், இது சிறந்த புத்தகங்கள் மட்டுமின்றி பரிசளிக்க உகந்த புத்தகங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
புத்தகங்களின் பெயர்கள் ஆங்கிலத்திலும், அவற்றின் ஆசிரியர்களின் பெயர்கள் தமிழிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Educated – தாரா வெஸ்டோவர்
பள்ளிக்கோ அல்லது மருத்துவமனைக்கோ செல்லாத தாரா வெஸ்டோவர், வீட்டில் இருந்து 17 வயதில் சில பிரச்சனைகள் காரணமாக வெளியேறினார். பின்னர், உலகை படித்த தாரா இந்த Educated புத்தகத்தை எழுதியுள்ளார். மேலும், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பட்டமும் பெற்றுள்ளார் தாரா.
Army of None – பால் ஸ்காரே
எதிர்காலத்தில் தானியங்கி ஆயுதங்கள் பெருகி அவை மனித இனத்தை எப்படி அழிக்கிறது என்பதை விளக்கியுள்ள கதை தான் Army of None. AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தானியங்கி கார்கள், தானியங்கி கதவுகள் என ஒவ்வொரு துறைகளிலும் பெருகி வரும் இக்காலக் கட்டத்தில் தானியங்கி ஆயுதங்கள் உற்பத்தியாகக் கூடும் என்ற எதிர்கால சிந்தனையுடனும் மனித குலத்திற்கு தரும் எச்சரிக்கையாகவும் இந்த கதையை பால் ஸ்காரே எழுதியுள்ளார்.
Bad Blood – ஜான் கேரிரோ
பத்து பில்லியன் டாலர் நிறுவனம் ஊழல் மற்றும் கார்ப்பரேட் ஆதிக்கத்தால் எப்படி சீரழிகிறது என்பதை விளக்கும் புத்தகமான Bad Blood புத்தகத்தையும் பில் கேட்ஸ் பரிந்துரைத்துள்ளார். இதனை ஜான் கேரிரோ எழுதியுள்ளார்.
21 Lessons for the 21st Century – யுவல் நோவா ஹராரி
21ஆம் நூற்றாண்டில் மனித இனம் சந்திக்கும் சவால்களும் அதற்கான தீர்வுகளையும் 21 பாடங்கள் மூலம் விளக்கும் இந்த புத்தகத்தை யுவல் நோவா ஹராரி எழுதியுள்ளார்.
The Headspace Guide to Meditation and Mindfulness – ஆண்டி புடிகோம்பே
பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டாவிற்கு மிகவும் பிடித்த புத்தகம் என்றால் அது இதுதானாம். ஆண்டி புடிகோம்பே எழுதியுள்ள இந்த புத்தகத்தின் கதை என்னவென்றால் பல்கலைக் கழக மாணவர் மன அழுத்தங்களில் இருந்து விடுதலை பெற புத்த துறவியாக மாறுவதே ஆகும்.