16 ஆண்டுகளுக்கு பிறகு.. நாட்டின் மிக நீளமான இரண்டடுக்கு பாலம் திறப்பு

இந்தியாவின் மிக நீளமான இரண்டடுக்கு பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

அசாம் மற்றும் அருணாச்சல் பிரதேச மாநிலங்கள் வழியாக பிரம்மபுத்திரா நதியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைத்து போகிபீல் என்ற இடத்தில் மிக நீளமாக இரண்டடுக்கு பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் நீளம் சுமார் 4.94 கி.மீ ஆகும்.

தேவ கவுடா கடந்த 1997ம் ஆண்டு பிரதமராக இருந்தபோது, இந்த பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் பிறகு, 2002ம் ஆண்டில் அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் கட்டுமானப்பணிகளை தொடங்கி வைத்தார். கடந்த 16 ஆண்டுகளாக கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இந்த பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

இந்தியாவின் மிக நீளமான ரயில்வே பாலமாகவும், ஆசியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய பாலமாகும் அமைந்துள்ளது. மேலே மூன்று வழிச்சாலையும், கீழே இரண்டு வழி ரயில் தடமும் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.5900 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தில் ரயில்களும் இயக்கப்படுகின்றன.

இதன்மூலம், வடகிழக்கு மாநிலங்களில் போக்குவரத்தை மேம்படும். இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரிக்கும். எல்லை பாதுகாப்பு படையினருக்கும் இந்த பாலம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

More News >>