ரசிகர்கள் தேர்வு செய்யும் சூர்யா படத் தலைப்பு!
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா37 படத்தின் தலைப்பை ரசிகர்கள் தேர்வும் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்.ஜி.கே படம் சில காரணங்களால் பிரேக் விட்ட நிலையில், கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா புதிய படம் ஒன்றில் நடிக்க ஆரம்பித்தார்.
இந்த படத்தில் பாரத பிரதமராக மோகன் லால் நடித்துள்ளார். அவரை காக்கும் பாதுகாவலனாக சூர்யா நடித்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பை ரசிகர்கள் தேர்வு செய்யுங்கள் என்ற அறிவிப்பை ட்விட்டரில் இன்று வெளியிட்ட இயக்குநர் கே.வி. ஆனந்த், மூன்று ஆப்ஷன்களையும் கொடுத்துள்ளார்.
மீட்பான், காப்பான், உயிர்கா என மூன்று தலைப்புகளில் ஒரு தலைப்பை ரசிகர்கள் வாக்களித்து தேர்வு செய்ய கூறினார். இதில் உயிர்கா என்பது உயிர்காப்பான் என்ற பொருளில் வருவதால், பலரும் அதை தேர்வு செய்து வருகின்றனர்.