லிப் லாக் காட்சியில் நடித்த மனிஷா ஸ்ரீ!
இந்தி ஆல்பம் ஒன்றை தயாரித்துள்ள நடிகை மனிஷா ஸ்ரீ, அதில் ரொமாண்டிக்கான லிப் லாக் காட்சியில் நடித்துள்ளார்.
நடராஜின் போங்கு மற்றும் விக்ரம் பிரபுவின் வீரசிவாஜி படங்களில் நடித்தவர் மனிஷா ஸ்ரீ. இந்த இரு படங்களும் அவருக்கு பெரிதாக போகவில்லை.
இந்நிலையில், இந்தி ஆல்பம் ஒன்றை தயாரித்து நடித்துள்ள மனிஷா ஸ்ரீ அதில் லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்துள்ளார். பியார் ஹோட்டா ஹை என தொடங்கும் இந்த பாடலை கார்த்திக் ஆச்சார்யா எழுதி இசையமைத்துள்ளார். மேலும், கார்த்திக்குடன் இணைந்து மனிஷா ஸ்ரீ இந்த பாடலை பாடியும் உள்ளார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வெர்ஜின் பசங்க வெப் தொடர் இளைஞர்களிடையே வைரலானது குறிப்பிடத்தக்கது.