புத்தாண்டை முன்னிட்டு பரிசு கொடுக்கப் போகும் கார்த்தி!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள தேவ் படத்தின் பாடல்கள் வரும் டிசம்பர் 29ம் தேதி ரிலீசாகவுள்ளது.

தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் என வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர் கார்த்தி ஹாட்ரிக் வெற்றிக்காக தயாராகி விட்டார்.

ராஜாத் ரவிசங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள தேவ் படத்தின் டீஸர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகியுள்ள படத்தின் அனைத்து பாடல்களும் வரும் டிசம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் அறிவித்துள்ளார் நடிகர் கார்த்தி.

பேட்ட படத்தின் டிரைலர் 28ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், கார்த்தியின் தேவ் பாடல்கள் 29ம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட் கொடுக்கப் போகிறது.

More News >>