இனி நோ பாரின் டூர்! தேர்தல் வரை இந்தியாவில் மட்டுமே இருப்பார் பிரதமர் மோடி!
பிரதமராக மோடி பதவியேற்ற பின் முதன் முறையாக அடுத்த 4 மாதங்களுக்கு எந்த வெளிநாட்டுக்கும் செல்லும் திட்டம் இல்லையாம். முழுக்க முழுக்க இந்தியா முழுவதும் தேர்தல் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளார்.
சுதந்திர இந்தியாவில் பிரதமராக இருந்த வாகளில் அதிக முறை வெளிநாட்டுப் பயணம் என்ற சாதனையைப் படைத்தவர் மோடி. கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் 48 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில் மோடி இந்தியா வருகை என்ற அளவில் எதிர்க்கட்சிகள் அவரை கிண்டல் செய்யும் அளவுக்கு வெளிநாட்டு பயணங்களில் பிஸியாக இருந்தவர் மோடி. இந்நிலையில் அடுத்து வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் பா.ஜ.க.வுக்கு பெரும் சவாலாக உள்ளது.
இந்தி பேசும் 3 மாநிலங்களில் தோல்வியால் பா.ஜ.க ஆட்டம் கண்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளும் முரண்டு பிடிக்கின்றன. கூடுதல் சீட் கேட்டு நெருக்கடி கொடுப்பதுடன் சில கட்சிகள் பா.ஜ.க. கூட்டணியில் இருந்தால் தோல்வி என ஓட்டம் பிடிக்கவும் செய்கின்றன. எனவே பா.ஜ.க.வின் சரிவை சரிக்கட்ட அடுத்த 4 மாதங்களுக்கு நாடு முழுவதும் மோடி சுற்றுப்பயணம் செய்யும் திட்டம் வகுக்கப்பட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
இதனால் அடுத்த நான்கு மாதங்களுக்கு வெளிநாடு டூர் புரோக்ராம் எதுவும் மோடிக்கு இல்லை என பிரதமர் அலுவலக தகவல்கள தெரிவிக்கின்றது.