ரஜினி, தனுஷ் ஒரே படத்தில் இயக்குநர் யார் தெரியுமா?

ஏ.ஆர். முருகதாஸ் படத்தை தொடர்ந்து ரஜினியும், தனுஷும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினியின் பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகிறது. பேட்ட படத்தை தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் முதல்வன் பட பாணியில் ஒரு புதிய படத்தில் நடிகர் ரஜினி ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அதற்கு நாற்காலி என்ற டைட்டில் பரிசீலிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், ஏ.ஆர். முருகதாஸ் படத்தை தொடர்ந்து, எச். வினோத் இயக்கத்தில் ரஜினி ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் அந்த படத்தில் மருமகன் தனுஷுடன் முதன்முறையாக ரஜினி இணைந்து நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய எச். வினோத், தற்போது அஜித்தை வைத்து பிங்க் ரீமேக்கை இயக்கி வருகிறார். பிங்க் ரீமேக்கை தொடர்ந்தும் இன்னொரு அஜித் படத்தையும் வினோத் இயக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களுக்கு பின்னர் ரஜினி, தனுஷ் படத்தை வினோத் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>