உலகின் ஹேண்ட்சம் நடிகராக தேர்வான ஹிரித்திக்
2018ம் ஆண்டுக்கான ஹேண்ட்சம் நடிகர் யார் என்ற தேர்வை பன்னாட்டுகளை சேர்ந்த நிறுவனம் ஒன்று சர்வே எடுத்தது. இதில், இந்தி நடிகர் ஹிரித்திக் ரோஷன் உலகிலேயே ஹாண்டம் நடிகராக தேர்வாகினார்.
ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பாட்டின்சன், தைவான் நடிகர் காட்பிரே காவ், கிறிஸ் இவான்ஸ், டேவிட் போரியனஸ், கனடா நடிகர் நோவா மில்ஸ், ஹென்றி காவில், டாம் ஹிடல்ஸ்டன் மற்றும் சாம் ஹேவ்கான் ஆகியோரை பின்னுக்குத்தள்ளி ஹிரித்திக் ரோஷன் முதல் இடத்தை பிடித்து தேர்வாகி உள்ளார்.
இதுதொடர்பாக, சர்வே நிறுவனம் முழுவிவரத்தை தெரிவித்துள்ளது. அதில், “உயரமாகவும், கவர்ச்சிகரமாகவும் உள்ள ஹிரித்திக் ரோஷன், திரையுலகில் நுழைந்த காலத்தில் இருந்தே பல சாதனைகளை படைத்துள்ளார். கவர்ச்சிகரமான கண்களும் திடகாத்திரமான உடல்கட்டும் அவருடைய தோற்றத்துக்கு மேலும் அழகூட்டுகிறது” என்றிருந்தது.
ஹிரித்திக் ரோஷனின் தோற்றம, பாக்ஸ் ஆபிஸ் சேகரிப்புகள், உலகளாவிய ரசிகர்கள் மற்றும் பிராண்டு ஒப்புதல்கள் ஆகியவைக் கொண்டு இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பன்னாட்டு சர்வே நிறுவனம் தெரிவித்தது. முன்னதாக ஹிரித்திக் ஆசியவின் கவர்ச்சிகரமான நாயகன் உள்ளிட்ட பல பட்டங்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது.