ஹோட்டல் தொடங்கப்போகும் ரகுல் ப்ரீத் சிங்!
சரியான சாப்பாட்டு பிரியை ஆன ரகுல் ப்ரீத் சிங் ஹோட்டல் ஒன்றை தொடங்கும் எண்ணம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் அண்ணன் சூர்யா மற்றும் தம்பி கார்த்தியுடன் தேவ் மற்றும் என்.ஜி.கே படங்களில் நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். மேலும், தெலுங்கில் என்.டி.ஆர். படத்தில் ஸ்ரீதேவியாகவும் நடித்துள்ளார்.
நான்கு ஆண்டுகளில் 16 படங்களை நடித்து முடித்துள்ள ஓயாத நடிப்பாளி, பிசினஸிலும் பக்கா கில்லாடி. வெற்றிகரமாக ஜிம் ஒன்றை நடத்தி வரும் ரகுல், தனக்கு பிடித்தமான உலகின் தலை சிறந்த உணவுகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் புதிய ஹோட்டல் ஒன்றை தொடங்க திட்டம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.