ஹாலிவுட் நடிகர் லியன் ஹெம்ஸ்வொர்த்தை மணமுடித்தார் பாடகி மைலி சைரஸ்!

பிரபல அமெரிக்க பாடகி மற்றும் நடிகையான மைலி சைரஸ் ஹாலிவுட் நடிகர் லியன் ஹெம்ஸ்வொர்த்தை திருமணம் செய்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் மைலி சைரஸ், ஹெம்ஸ்வொர்த் திருமண புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. முன்னறிவிப்பின்றி, குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த திருமணம் ரகசிய திருமணமா என்ற கேள்வியும் ஹாலிவுட்டில் எழுந்துள்ளது.

ஹங்கர் கேம்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் லியன் ஹெம்ஸ்வொர்த்தும் பாடகி மைலி சைரஸும் வெகுநாட்களாக காதலித்து வந்த நிலையில், தற்போது திருமணம் செய்துள்ளனர்.

டென்னஸ்சியின் ப்ரான்க்ளின் என்ற இடத்தில் உள்ள விலையுயர்ந்த மேன்சனில் கடந்த ஞாயிறன்று இவர்களது திருமணம் நடைபெற்றது. இன்ஸ்டாகிராமில் வெளியான திருமண கேக் வெட்டும் புகைப்படங்களும், பின்னாடி அலங்கரிக்கப்பட்டிருந்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் பதாகைகளுமே இவர்கள் திருமணம் செய்து கொண்டதை வெளிச்சப்படுத்தியுள்ளது.

இதுவரை இருவருமே அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்ததை வெளியுலகிற்கு அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>