அருண் விஜய்யின் தடம் டீஸர் ரிலீஸ்

அருண் விஜய் நடித்துவரும் ‘தடம்’ படத்தின் டீஸர் பொங்கலை முன்னிட்டு வெளியாகி உள்ளது.

அருண் விஜய் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளிவந்த படம் ‘தடம்’. இவர்களின் கூட்டணியில் தற்போது தடம் என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது. ஆக்ஷன் எண்டெர்டெயினராக உருவாகி வரும் இந்தப் படத்தில் முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கிறார் அருண் விஜய். இந்தர் குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் ஹீரோயினாக தன்யா ஹோப், வித்யா பிரதீப், ஸ்மிருதி வெங்கட் ஆகிய மூன்று பேரும் நடித்துள்ளனர். பெப்சி விஜயன், மீரா கிருஷ்ணன் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய அருண் ராஜா இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் டீஸர் தற்போது வெளியாகி உள்ளது.

டீஸர் இதோ..

 

 

More News >>