சர்வம் தாளமயம் ரிலீஸ் எப்போ?

ராஜீவ் மேனன் நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கியுள்ள சர்வம் தாளமயம் படத்தின் ரிலீஸ் ஜனவரிக்கு தள்ளிப் போயுள்ளது.

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் இசையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள சர்வம் தாளமயம் திரைப்படம் டிசம்பர் 21ம் தேதி ரிலீசாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. 7 பெரிய படங்கள் அந்த நாளில் போட்டிப் போட ஆரம்பிக்க, அந்த போட்டியில் இருந்து சர்வம் தாளமயம் படம் மட்டுமே விலகியது.

அதனை அடுத்து, வரும் 28ம் தேதி படம் ரிலீசாகும் என மறு அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. ஆனால், வரும் வெள்ளிக்கிழமையும் படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், ஜனவரி 25ம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கலுக்கு பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் வருவதால், சர்வம் தாளமயம் முன்கூட்டியே ரிலீசாக வாய்ப்பில்லை.

More News >>