ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த தாக்கரே டிரெய்லர்!

சிவசேனா கட்சியின் நிறுவனர் பாலசாஹேப் தாக்கரேவின் பயோபிக் படமான தாக்கரே டிரைலர் வெளியாகி ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

ரஜினியின் பேட்ட படத்தின் வில்லனாக நடித்துள்ள பாலிவுட் நடிகர் நவாசுதின் சித்திக் நடிப்பில் உருவாகியுள்ள தாக்கரே டிரைலர் இந்திய அளவில் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

மகாராஷ்ட்ராவின் மிகப்பெரிய அரசியல்வாதியான பால் தாக்கரேவின் வாழ்க்கை மற்றும் அரசியல் போராட்டங்கள் குறித்து விளக்கும் படமாக இது அமைந்துள்ளது.

இந்தியாவையே இன்றளவும் உலுக்கும் பாபர் மசூதி இடிக்கப்பட்டது இவரது உத்தரவின் பேரில் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>