சூர்யா பட டைட்டில் புத்தாண்டு அன்று அறிவிக்கப்படுமாம்!
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா37 படத்தின் தலைப்பு புத்தாண்டு பரிசாக அறிவிக்கப்படவுள்ளது.
அயன், மாற்றான், படங்களை தொடர்ந்து கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 37 திரைப்படத்தின் பெயரை ரசிகர்கள் தேர்வு செய்ய நேற்று ஒரு போட்டியை இயக்குநர் கே.வி. ஆனந்த் வைத்தார்.
காப்பான், மீட்பான், உயிர்கா என மூன்று டைட்டில்களை கொடுத்து ரசிகர்களை தேர்வு செய்ய கூறினார். ரசிகர்கள், உயிர்கா என்பது வித்தியாசமாக உள்ளதால், அதனை அதிகளவில் தேர்வு செய்தனர்.
இந்நிலையில், டைட்டில் தேர்வுக்கு நன்றி, வரும் புத்தாண்டு தினத்தன்று சூர்யா37 படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கே.வி. ஆனந்த் கூறியுள்ளார்.
இந்த படத்தில் பிரதமராக மோகன் லால் நடித்துள்ளார். நடிகர் ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.