ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி!
ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி வரை ரயில் பாதை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பாம்பன் ரயில் பாலமும் புதிதாக அமைக்கப்பட உள்ளது.
1964-ல் ஏற்பட்ட புயலால் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையிலான ரயில் பாதை முற்றிலும் அழிந்தது. 54 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரயில் பாதை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி ரூ.204 கோடியை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.
இதே போன்று 104 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில் பாலமும் மாற்றப்பட்டு புதிய பாலம் கட்டப்பட உள்ளது. நவீன தொழில் நுட்பத்தில் தானியங்கி தூக்குப் பாலமும் அமைக்கப்பட உள்ளது.