ஜோதிகா நடிப்பில் நாச்சியார் டிரைலர் ரிலீஸ்
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நாச்சியார் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
பாலாவின் நாச்சியார் திரைப்படம் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி உள்ளார். ஏற்கனவே டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள ஜோதிகாவை, இதுவரை யாரும் பார்த்திடாத வகையில் நடிப்பை வெளிக்கொண்டு வந்துள்ளார். ஜி.வி.பிரகாஷூக்கு இந்த படம் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாச்சியார் படத்தின் டிரைலர் இதோ..