இது எப்படி..? இன்ஸ்டாகிராம் பயனர்களே... பாருங்கள்!

காணொளி அழைப்பு (Instagram Video calling): இன்ஸ்டாகிராமில் முழுமையான தொடர்பு அனுபவத்தை பெறுவதற்கு வீடியோ காலிங் உதவுகிறது.

யாரை காணொளியில் அழைக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அந்த இன்ஸ்டாகிராம் பயனரின் அரட்டைக்கான சாட் (Chat)என்னும் தொடர்பை திறக்கவும். மேற்புறம் வலப்பக்கம் உள்ள காணொளிக்கான வீடியோ ஐகானை (Icon) அழுத்தி, காணொளியில் பேசி இன்புறலாம்.

தவிர்க்கலாம் (Mute people): சிலருடைய இன்ஸ்டாகிராம் பதிவுகளை பார்க்கவே உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனாலும் அவர்கள் சளைக்காமல் பதிவுகளை, படங்களை பதிவேற்றிக்கொண்டே இருக்கலாம். அப்படிப்பட்ட பயனரின் கணக்கை திறந்து, வலப்பக்க ஓரத்தில் காணப்படும் அமர்த்துக என்னும் 'mute' பொத்தானை அழுத்துங்கள். போஸ்ட் என்னும் சாதாரண பதிவுகள், ஸ்டோரி என்னும் வகையை சேர்ந்த பதிவுகளை தனித்தனியாகவோ அல்லது இரண்டையுமோ நீங்கள் அவர்களுக்குத் தெரியாமல் தவிர்த்துவிட இயலும்.

இசையூட்டலாம் (Add music to Instagram stories): பதிவுகளுக்கு கொஞ்சம் இசை சேர்த்தால் கலக்கலாக இருக்குமல்லவா! இன்ஸ்டாகிராம் இசை கருவூலத்திலிருந்து (Music Library) நீங்கள் விரும்பும் இசையை உங்கள் ஸ்டோரிரக பதிவுகளோடு சேர்க்கலாம்.நீங்கள் பதிவேற்ற விரும்பும் வீடியோ என்னும் ஒளிக்கோவை அல்லது புகைப்படத்தை தெரிவு செய்யுங்கள். மேற்புறமுள்ள ஸ்மைலி மேல் (tap) சொடுக்கவும். கொடுக்கப்பட்டுள்ள இசைக்கான ஸ்டிக்கர்மேல் அழுத்தவும். பின்னர் உங்களுக்கு விருப்பமான பாடலை தெரிவு செய்யவும்.

தேடுதல் விவரங்களை நீக்கலாம் (Clear search history): உங்கள் இனிய எதிரிகள் யாராவது ஸ்மார்ட்போனில் நீங்கள் தேடிய விவரங்களை பார்ப்பதால் விவகாரங்கள் கிளம்பக்கூடும் என்று அஞ்சுகிறீர்களா? ஃப்ரொபைல் என்னம் உங்கள் விவர பக்கத்திற்குச் (Profile) சென்று, செட்டிங் (Settings) பகுதியில் தேடுதல் என்னும் search பகுதிக்குச் சென்று அதில் பதிவானவற்றை அழிக்கலாம்.குரல் செய்திகள் (Instagram Voice messages): பக்கம் பக்கமாக எப்படி டைப் பண்ணுவது என்று சலிப்பாய் உணருகிறீர்களா? அரட்டைப் பட்டியை (Chat) திறந்து, ஒலிவாங்கிக்கான (Mic) ஐகானை அழுத்தவும். நீண்ட நேரம் அதில் அழுத்திக்கொண்டிருப்பதன் மூலம் குரல் பதிவுகளை அனுப்ப இயலும்.என்ஜாய் யுவர் இன்ஸ்டாகிராம்!

More News >>