நான் தீக்குளித்து சாவேன் ... சீமான் பிரகடனம் இதற்குதான்!
தமிழகத்தை சாதிக் கட்சிகள் ஆள முடியாது.அப்படி வென்றால் தீக்குளித்து சாவேன் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆவேசத்துடன் பேசும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அவருடைய பேச்சில் தமிழகத்தில் உள்ள எல்லாக் கட்சிகளையும் போட்டுத் தாக்குகிறார். வன்னியன் நாட்டை ஆள வேண்டும் என்கிறார் ஐயா ராமதாஸ். ஆனால் நல்ல ஒரு வன்னியனை சாதியை முன் நிறுத்தி நிறுத்தினால் எல்லாக் கட்சிகளும் வன்னியரையே நிறுத்தும்.
அப்போது அரசியல் சாதிக் கட்சிதான் வெல்லுமே ஒழிய தனிப்பட்ட சாதிக் கட்சி வெற்றி பெறாது. அதே நிலைதான் கவுண்டர், தேவர், நாடார் என அனைத்துக் கட்சிகளுக்கும். இதை மீறி தமிழகத்தில் சாதிக் கட்சி வென்றால் தீக்குளித்து சாவேன் என்கிறார் சீமான்.
ஒட்டு மொத்த தமிழனும் சேர்ந்து ஒரு தமிழனை முன்னிறுத்தினால் தமிழனால் நாடாள முடியும் என்றும் உணர்ச்சி மழை பொழியும் சீமானின் பேச்சைப் பாருங்களேன்: