மெல்போர்ன் போட்டியில் இந்தியா அபார பந்துவீச்சு - 151 ரன்னில் சுருண்டது ஆஸி.! இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்!
மெல்போர்னில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 151 ரன்களில் சுருண்டது முதல் இன்னிங்சில் இந்தியாவை விட 292 ரன்கள் பின் தங்கியுள்ளது.
இந்தப் போட்டியில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய ஆஸி அணி இரண்டாம் நாளான நேற்று ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்திருந்தது.
3-ம் நாளான இன்று ஆட்டத் தொடக்கம் முதலே இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸி.வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க 151 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியத் தரப்பில் வேகத்தில் மிரட்டிய பும்ரா 33 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், சமி, இஷாந்த் தலா எ விக்கெட் எடுத்தனர்.
முதல் இன்னிங்சில் இந்தியாவைக் காட்டிலும் 292 ரன்கள் பின் தங்கியுள்ளது ஆஸ்திரேலியா. தொடர்ந்து இந்தியா 2-வது இன்னிங்சை ஆடி வருகிறது. இன்னும் 2 நாள் ஆட்டம் உள்ளதால் இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது உறுதி என்றே கூறலாம்.