பட்டயகிளப்பும் பேட்ட டிரைலர்: பட ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் பேட்ட படத்தின் டிரைலர் ரிலீசாகி பட்டயகிளப்பி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பேட்ட. இந்த படத்தின் டிரைலர் ரிலீசாகி வைரலாகி வருகிறது.
பேட்ட படத்தில், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சிம்ரன், திரிஷா ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களை தவிர, சசிகுமார், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சனத் ரெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.
பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்து வந்த நிலையில், பேட்ட பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் 10ம் தேதி ரிலீசாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்ட படத்தின் டிரைலரில் மாஸ் காட்டும் ரஜினியின் வசனங்கள் ரசிகர்களை ஈர்த்துள்ளது. ரஜினியின் புது கெட்டப் பக்கா. டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், படமும் மாஸாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.