2-வது இன்னிங்சில் இந்தியா படு மோசம் - 54 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் இழப்பு!
மெல்போர்னில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 54 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
முதல் இன்னிங்சில் 292 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா பாலோ ஆன் கொடுக்காமல் 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. பாட் கம் மின்ஸ் வேகத்தில் இந்திய முன்னணி பேட்ஸ்மென்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆட்ட முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் சேர்த்தது.
தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் மட்டுமே நிதானமாக ஆடி 28 ரன்களுடன் அவுட்டாகாமல் உள்ளார். விஹாரி, புஜாரா, கோஹ்லி, ரஹானே ஆகிய 4 பேரின் விக்கெட்டுகளை கம்மின்ஸ் வீழ்த்தினார்.
ஹேசல்வுட் வசம் ரோஹித் சர்மா விக்கெட்டை பறிகொடுத்தார். முதல் இன்னிங்சையும் சேர்த்து இந்தியா 346 ரன்கள் முன்னிலையில் உள்ளதால் இந்திய அணிக்கு இன்னமும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.