சாத்தூர் கர்ப்பிணிக்கு எச்ஐவியை தொடர்ந்து மஞ்சள் காமாலை: மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

எச்ஐவி பாதிப்பு ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவியை தொடர்ந்து மஞ்சள் காமாலை பாதிப்பும் ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

எச்ஐவி பாதித்த ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் கர்ப்பிணிப் பெண்ணுக்கு 9 பேர் கொண்ட மருத்துவக்குழு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும், வரும் ஜனவரி மாதம் 30ம் தேதி பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் கணித்துள்ளனர். இதனால், குழந்தைக்கு எச்ஐவி தொற்று பரவாமல் இருக்க பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, அப்பெண்ணுக்கு தொடர்ந்து பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று நடத்திய பரிசோதனையின்போது, கர்ப்பிணிக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், மஞ்சல் காமாலை பாதிப்பை குணப்படுத்த கர்ப்பிணி பெண்ணுக்கு தனி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

எச்ஐவி பாதிப்பால், அப்பெண் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவருக்கு மனநல சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

More News >>