கொடைக்கானல் அருகே பரிதாபம்: கேஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி
கொடைக்கானல் அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே மங்களம்கொம்பு கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (52). இவரது மனைவி மஞ்சுளா தேவி (42), மகள் விஷ்ணுப்பிரியா (10). மூவரும் குடும்பத்துடன் சின்னாளம்பட்டி என்ற பகுதியில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், கணேசன் விடுமுறையை முன்னிட்டு தனது மனைவி மற்றும் மகளுடன் சொந்த ஊருக்கு வந்து தங்கியுள்ளார்.
மூன்று பேரும் வீட்டில் இருந்த நிலையில், இன்று காலை 6 மணியளவில் திடீரென சிலிண்டர் வெடித்தது. இதில், மூன்று பேரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், கேஸ் சிலிண்டர் தானாக வெடித்ததா ? இல்லை தற்கொலை முயற்சியா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.