பிலிப்பைன்ஸ்: சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதோடு, சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ், மிண்டானோ தீவில் இன்று 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜெனரல் சான்டோஸ் நகரின் கிழக்கில் 193 கி.மீ தொலைவில் பூமிக்கடியில் 59 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகியது. இதன் எதிரொலியால், கட்டிங்கள் குலுங்கி மக்களை பீதியடையச் செய்தது. கட்டிடங்களுக்குள் இருந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால், உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இருப்பினும், இதுதொடர்பான தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

இதற்கிடையே, நிலநடுக்கத்தின் எதிரொலியால் பசிபிக் கடற்பகுதியின் சுனாமி அலைகள் உருவாக வாய்ப்புள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இதனால், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசிய கடற்பகுதியில் சுனாமி வருவாக வாய்ப்புள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

More News >>