தொடக் கூடாததை தொட்டுவிட்டார்- திருச்சி சிவாவைக் கண்டித்த ஸ்டாலின்!

திருச்சி சிவாவின் அத்துமீறல்களால் ஸ்டாலின் கொந்தளிப்பில் இருப்பதாகச் சொல்கின்றனர் திமுக பொறுப்பாளர்கள். இன்னும் எத்தனை ஆண்டுகாலம் ஆனாலும் அவர் திருந்த மாட்டார் என ஸ்டாலின் கோபப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் உள்ள கான்ஸ்டிட்யூஷன் கிளப் ஆஃப் இந்தியா என்பது மதிப்புமிகுந்த கிளப். அதன் நிர்வாக கமிட்டித் தேர்தலில் போட்டியிட்டார் திருச்சி சிவா.

இந்தத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஸ்டாலின் கவனத்துக்கும் அவர் கொண்டு செல்லவில்லை. இந்தத் தேர்தலில் 100 வாக்குகளைப் பெற்று தோற்றுவிட்டார் சிவா.

இதை 'டெல்லி கிளப் தேர்தலிலேயே திமுக தோற்றுவிட்டது' எனப் பரப்பிவிட்டனர். இந்தக் கிளப்பில் தென்னிந்திய மாநிலங்கள், பஞ்சாப், ஒடிசா, உ.பி, குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உறுப்பினராக இருப்பதால் சிவாவின் தோல்வி, திமுகவின் தோல்வியாக மாறிவிட்டது.

ஏற்கெனவே, கனிமொழியோடு தகராறு செய்ததால் ஸ்டாலினின் கோபத்துக்கும் ஆளானார் சிவா. தற்போது கிளப் தேர்தலில் அவர் மண்ணைக் கவ்வியதையும் ஆத்திரத்துடன் கவனித்திருக்கிறார் ஸ்டாலின்.

இந்த சம்பவம் தொடர்பாகப் பேசிய திமுக பொறுப்பாளர்கள், ' தலைவர் ஸ்டாலினோடு ஒரே காலகட்டத்தில் அரசியலுக்கு வந்தவர் சிவா. அவரால் பாதிக்கப்பட்ட கட்சிக்காரர்கள் ஏராளம்.

எந்த ஊருக்குப் போனாலும், தளபதிக்கு எங்க ரூம் போடுவீங்களோ..அங்கதான் எனக்கும் ரூம் போடனும். தளபதியும் நானும் ஒன்னு புரிஞ்சுதா?' என அதட்டுவார்.

கட்சிக்காரர்களை வயது வித்தியாசம் பார்க்காமல், சிகரெட் வாங்கிவிட்டு வா...சரக்கு வாங்கிட்ட வா...என ஆதிக்கம் காட்டி வந்தார்.

இதனால் மனவேதனையோடு மாற்றுக் கட்சிகளுக்குப் போனவர்கள் அதிகம். ஒவ்வொரு மாவட்டத்திலும் சிவாவின் ஆட்டத்தைக் கண்ட ஸ்டாலின்., நான் வந்த அதே காலத்தில்தான் இவரும் கட்சிக்குள் வந்தார். சிகரெட், மது என தொடக்கூடாததை எல்லாம் தொட்டதால் கெட்டுப் போய்விட்டார். எந்தக் காலத்திலும் அவர் திருந்த மாட்டார்' எனக் கொதித்தாராம். சிவாவைக் கட்டம் கட்டும் வேலைகளைத் தொடங்கிவிட்டார் ஸ்டாலின்' என்கின்றனர்.

-அருள் திலீபன்

More News >>