அபிராமி மெகாமால் மற்றும் திரையரங்குகளுக்கு விரைவில் மூடுவிழா!

திரையரங்குகளின் தரத்தை உயர்த்தும் வகையில், அபிராமி மெகாமால் மற்றும் திரையரங்குகளை மூடிவிட்டு மீண்டும் பிரம்மாண்ட 14 அடுக்கு மாடி கட்டிடம் திறக்க அபிராமி மால் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ளது அபிராமி மெகாமால். பிரபலமாக இருந்து வந்த அபிராமி மெகாமால் கடந்த சில ஆண்டுகளாக பொலிவிழந்து வருகிறது. பார்வையாளர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகின்றன. இதனால், அபிராமி மெகாமாலுக்கு புத்துயிர் வழங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

1976ஆம் ஆண்டு அபிராமி மற்றும் பால அபிராமி திரையங்குகள் திறக்கப்பட்டு படங்கள் திரையிடப்பட்டு வந்தன. பிறகு, 1982ம் ஆண்டில் அன்னை அபிராமி மற்றும் சக்தி அபிராமி ஆகிய திரையரங்குகள் திறக்கப்பட்டன. பின்னர், 2002ம் ஆண்டில் அபிராமி மெகா மால் அமைக்கப்பட்டது. 2005ம் ஆண்டு முதல் அபிராமி 7 ஸ்டார், ரோபோ பால அபிராமி, ஸ்ரீ அன்னை அபிராமி மற்றும் ஸ்வர்ண சக்தி அபிராமி ஆகிய பெயர்களுடன் நவீன வசதிகளுடன் திரையரங்குகள் இயங்கிக் கொண்டு இருக்கின்றன.

டிஜிட்டல் சினிமா அதிகரித்து வரும் நிலையில், அபிராமி திரையரங்குகளில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, அபிராமி மெகாமால் மற்றும் அபிராமி திரையரங்குகளை வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் மூடிவிட்டு புதுப்பிக்கப்படுகிறது.

14 அடுக்கு மாடி கட்டிடமாக உருவெடுக்கும் அபிராமி மாலில் முதல் மூன்று தளங்கள் திரையரங்குகள் கொண்ட வணிகவளாகமும், மற்ற மாடிகள் குடியிருப்புகளாகவும் கட்டப்படுகின்றன.

இதற்கான கட்டுமானப் பொறுப்பை ரயின்போ நிறுவனத்தாரிடம் ஒப்டைக்கப்பட்டுள்ளது. கட்டிடப்பணி தொடங்கி 24 மாதங்களில் மக்களை மகிழ்விக்க புத்துயிர் பெற்று வருகிறது அபிராமி மெகா மால் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More News >>