ராஜ்யசபாவில் முத்தலாக் மசோதா நிறைவேறுமா? - அதிமுக கையில் கடிவாளம்!

பா.ஜ.க.வுக்கு போதிய பலம் இல்லாததால் ராஜ்யசபாவில் முத்தலாக் மசோதா நிறைவேறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 13 எம்.பி.க்களை கொண்டுள்ள அதிமுக எடுக்கும் முடிவைப் பொறுத்தே முடிவு அமையும் என்பதால் அக்கட்சிக்கு மவுசு அதிகரித்துள்ளது.

முத்தலாக் மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய பா.ஜ.க. அரசு உறுதியாக உள்ளது. மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு இருந்தாலும் பெரும்பான்மை பலம் இருந்ததால் கடந்த வியாழனன்று நிறைவேறியது.

ஆனால் மாநிலங்களவையில் பா.ஜ.க.வுக்கு போதிய பலம் இல்லாததால் நிறைவேறுமா? என்ற சந்தேகமே உள்ளது. தற்போது ராஜ்யசபாவில் மொத்த உறுப்பினர்கள் 245. இதில் பா.ஜ.க.வின் பலம் 73 மட்டுமே.

அதன் ஆதரவு கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, பிஜு ஜனதா தளம், அகாலி தளம் உ ள்ளிட்ட கட்சிகளையும் சேர்த்தாலும் 100ஐத் தாண்டாது. மெஜாரிட்டிக்கு 123 எம்.பி.க்கள் ஆதரவு தேவை.

எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு 50, திரிணாமுல் 13, சமாஜ்வாதி 13, அதிமுக 13, தெலுங்கு தேசம் 6, தேசியவாத காங்.5, பகுஜன் 4, திமுக 4, ஆம் ஆத்மி 3 , இரு கம்யூனிஸ்டுகள் 8, மற்ற பா.ஜ.க. எதிர்ப்பு உறுப்பினர்கள் 10, என 130-க்கும் மேற்பட்டோர் மசோதாவை எதிர்ப்பார்கள்.

இதனால் மசோதா தோல்வி அடையும் வாய்ப்புகளே அதிகம். வரும் திங்கட்கிழமை மசோதா மாநிலங்களவையில் ஒட்டெடுப்புக்கு வருகிறது. அதற்குள் அதிமுகவை சரிக்கட்டும் முயற்சிகளில் பா.ஜ.க தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.

More News >>