புத்தாண்டு கொண்டாட்டம் - மும்பையில் இரவு முழுவதும் குடித்து கும்மாளம் போட மகாராஷ்டிரா அரசு அனுமதி!

மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிராவின் முக்கிய நகரங்களில் புத்தாண்டை விடிய, விடிய கொண்டாட அம்மாநில முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளது மதுப் பிரியர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

இந்தியாவின் முக்கிய வர்த்தக நகரமாக மும்பை திகழ்கிறது. பல்வேறு தரப்பு மக்களும் வசிக்கும் இங்கு புத்தாண்டை விடிய விடிய கொண்டாட அனுமதிக்க வேண்டும் என சிவசேனா கட்சியின் இளைஞரணித் தலைவர் ஆதித்யா தாக்கரே, மகாராஷ்டிர முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதையடுத்து மும்பையில் குடியிருப்பு அல்லாத பகுதிகளில் அமைந்துள்ள பார்கள், கேளிக்கை விடுதிகள், மால்கள் போன்றவற்றை புத்தாண்டு தினத்தன்று விடிய, விடிய திறந்து வைக்க முதல்வர் பட்னாவிஸ் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். மும்பை மட்டுமின்றி புனே, தானே, நவிமும்பை உட்பட மாநிலத்தின் முக்கிய நகரங்களிலும் விடிய, விடிய புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர அரசின் இந்த உத்தரவால் மது, கேளிக்கை பிரியர்கள் இப்போதே உற்சாகத்தில் மிதக்கின்றனர்.

 

More News >>