நானும் பிரதமரானது ஒரு ஆக்சிடென்ட் தான் - மன்மோகன்சிங் பற்றிய படம் குறித்து தேவேகவுடா கமெண்ட்!

மன்மோகன் சிங் பற்றிய "தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்" திரைப்படம் வெளியாகும் முன்னரே பலத்த சர்ச்சையாகி உள்ளது. உண்மைக்கு புறம்பான சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக காங்கிரசில் ஒரு தரப்பினரிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதன் பின்னணியில் பா.ஜ.க.வின் சதி இருப்பதாக காங்கிரசாரே குற்றச்சாட்டு வைக்கின்றனர். லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் ஆதாயத்திற்காக காங்கிரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த பா.ஜ.க. சதி செய்து மன்மோகன் சிங் பற்றிய திரைப்படத்தில் சர்ச்சை காட்சிகளை அனுமதித்துள்ளதாகவும் புகார் வாசிக்கின்றனர்.

இந்நிலையில் இத்திரைப்பட சர்ச்சை குறித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடாவிடம் கேட்டபோது, இத்திரைப்படத்திற்கு அனுமதி கொடுத்தது யார்? எப்படி கொடுத்தார்கள் என்றும் தெரியவில்லை. நான் பிரதமரானதே ஒரு ஆக்சிடென்ட் தான் என கிண்டலாக தெரிவித்துள்ளார்.

More News >>