வாசிப்பு பிரியரா நீங்கள்? உங்களுக்கேற்ற கிண்டில் இதுதான்!

'வாசிப்பு ஓர் இயக்கம்' என்பார்கள். 'புத்தகமே சிறந்த நண்பன்' என்றும் ஒரு கூற்று உண்டு. புத்தக பிரியர்களுக்கான தொழில்நுட்ப வசதியே கிண்டில்! புத்தகங்களுக்கான காகிதம், அச்சு ஆகிய பெரிய முதலீடுகள் தவிர்க்கப்படுவதால், ஒப்புநோக்க குறைந்த விலையிலேயே கிண்டிலில் புத்தகங்கள் வாசிக்கக் கிடைக்கின்றன.

2007ம் ஆண்டு அமேசான் நிறுவனம் கிண்டிலை அறிமுகப்படுத்தியது. காலப்போக்கில் அது மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், மராத்தி. ஹிந்தி ஆகிய இந்திய மொழிகளிலும் ஜெர்மன், மாண்டரின் உள்பட பல்வேறு நாடுகளின் மொழிகளில் அமேசான் கிண்டிலில் புத்தகங்கள் கிடைக்கின்றன.

'என்ன இருந்தாலும் புத்தகத்தின் பக்கங்களை அப்படியே வருடி, வாசிப்பது போன்ற உணர்வை கிண்டில் தருவதில்லை' என்பவர்களும் உள்ளனர். கிண்டில் அப்படியே புத்தகம் வாசிக்கும் உணர்வை அளிக்கும் என்று வாதிடுவது நம் நோக்கமல்ல. மாறி வரும் தொழில்நுட்ப தலைமுறைக்கு ஏற்ப வாசிப்பை எளிதாக்குவதில் கிண்டிலும் பங்கு வகிக்கிறது என்பது மறுக்க இயலாத ஒன்று.

2018ம் ஆண்டு சந்தைக்கு வந்த கிண்டில் பேப்பர் ஒயிட் 2018 பயன்படுத்துவதற்கு ஏற்றது. குறைந்த எடை, சரியான அளவு, பயன்படுத்த எளிதானது, போதுமான சேமிப்பளவு, அதிக திறன் கொண்ட மின்கலம், வாங்கக்கூடிய விலை போன்ற காரணிகளை கொண்டு பார்க்கும்போது வாசகர்களுக்கு ஏற்றது இது என்று கூறப்படுகிறது.

4ஜி இணையதொடர்பு கொள்ளக்கூடிய 8 ஜிபி சேமிப்பளவு கொண்ட வைஃபை வசதி கொண்ட கிண்டில் பேப்பர் ஒயிட் 12,999 ரூபாய் விலையிலும் 32 ஜிபி சேமிப்பளவு கொண்ட கிண்டில் பேப்பர் ஒயிட் 17,999 ரூபாயிலும் கிடைக்கிறது.புத்தகம் வாசித்த உணர்வை அப்படியே கொடுக்காவிட்டாலும் பரந்த வாய்ப்பு, முக்கியமானவற்றை புத்தகத்தில் அடிக்கோடு இடுவது போன்று வித்தியாசப்படுத்தி காட்டக்கூடிய வசதி ஆகியவை கிண்டிலையும் உங்கள் இருதயத்திற்கு பரிச்சயமாக்கும்.

More News >>