ஆண்ட்ராய்டு பயனர்களை ஸ்பேம்களிடமிருந்து பாதுகாக்கும் கூகுள்!

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்தும் போன்களில் வரும் தேவையற்ற செய்திகளை தவிர்க்கும் பாதுகாப்பு வசதியை (spam protection feature) கூகுள் அறிமுகம் செய்துள்ளது. ஏறத்தாழ ஆறு மாதங்கள் நடந்த மேம்படுத்துதல் பணி முடிந்த நிலையில் இந்தப் பாதுகாப்பு வசதி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

குறுஞ்செய்திகளுக்கான செயலியில் செய்திகளை திறந்தவுடன் 'தேவையற்ற செய்திகளிலிருந்து பாதுகாப்பு - புதிய வசதி' என்று பொருள்படும் New! Spam protection அறிவிப்பை பயனர்கள் பார்க்க முடியும். இந்தப் புதிய மாற்றம் சர்வர் என்னும் வழங்கியிலிருந்து தரப்படுவதால், பயனர் செயலியை மேம்படுத்த (update) வேண்டிய கட்டாயம் இல்லை.

முதன்முறை அறிமுகத்திற்கான செய்தி வந்தபின்னர், செட்டிங்ஸ் மற்றும் அட்வான்ஸ் மெனு பகுதிகளுக்குச் சென்று இந்த வசதியை மட்டுறுத்திக்கொள்ளலாம்.

இதைப் பற்றி அதிகாரப் பூர்வமான விளக்கம் வராத நிலையில், கூகுள் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரவழி கற்றல் முறையை பயன்படுத்தி, தேவையற்ற செய்திகளை கண்டுபிடித்து தவிர்க்க உதவலாம் என்று நம்பப்படுகிறது.போனிலுள்ள குறுஞ்செய்திகளை (SMS / MMS) ஏனைய சாதனங்களிலிருந்து பார்க்கக்கூடிய இணைய வழி செயலியை கடந்த வாரம் கூகுள், android.com என்ற தளத்திலிருந்து google.com என்ற இணைதயத்திற்கு மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>