திருவாரூர் தேர்தலில் முதல் ஆளாக வேட்பாளர் தேர்வில் திமுக தீவிரம் - போட்டியிட விரும்புவோருக்கு அழைப்பு!
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 2 மற்றும் 3-ம் தேதிகளில் விண்ணப்பம் அளிக்கலாம் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வரும் 2-ம் தேதி புதன் காலை 10 மணி முதல் 3-ம் தேதி வியாழன் மாலை 6 மணிக்குள் அண்ணா அறிவாலயத்தில் ஒப்படைக்கலாம்.
இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ 25 ஆயிரம் . வேட்பாளர் நேர்காணல் 4-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.