மக்களவைத் தேர்தலில் சுயேட்சையாக களமிறங்குகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ் - போட்டியிடும் தொகுதி சஸ்பென்ஸ்
மக்களவைத் தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கப்போவதாக நடிகர் பிரசாஷ்ராஜ் அறிவித்துள்ளார்.
கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் என தமிழ், கன்னட படங்களில் நடிப்பில் அசத்தி வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். சமீப காலமாகசமூக பிரச்னைகளிலும் வெளிப்டையாக தமது கருத்துக்களை பாரபட்சமின்றி விளாசி வருகிறார்.
கர்நாடகத்தில் சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் மக்களிடையே அரசியல் வழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் அரசியலில் குதிக்கவும் தயாராகி விட்டார் நடிகர் பிரகாஷ் ராஜ். டுவிட்டால் புத்தாண்டு வாழ்த்துடன் வரும் மக்களவைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
ஆனால் எந்தத் தொகுதியில் என்பதை பின்னர் அறிவிக்கப் போவதாக கூறி சஸ்பென்ஸ் வைத்துள்ளார். பிறப்பால் கன்னடர், புகழ் பெற்றது தமிழ்த் திரையில் என்பதால் பிரகாஷ்ராஜ் போட்டியிடப் போவது கர்நாடக மாநிலத்திலா? தமிழகத்திலா? என்பது இப்போதைக்கு அவருக்கு மட்டுமே தெரிந்த உண்மை.