ஆரம்பிச்சுட்டாரய்யா மாயாவதி - ராஜஸ்தான், ம.பி.யில் ஆதரவு வாபஸ் என மிரட்டல்!
பகுஜன் சமாஜ் கட்சியினர் மீது முந்தைய பா.ஜ.க அரசு போட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என ராஜஸ்தான், ம.பி., அரசுகளுக்கு மாயாவதி நிபந்தனை விதித்துள்ளார். இல்லாவிட்டால் இரு மாநில காங்.அரசுகளுக்கான ஆதரவை வாபஸ் பெறப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
கடந்த மாதம் நடந்த இடைத் தேர்தலில் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் பெரும்பான்மைக்கு ஓரிரு தொகுதிகள் குறைவாகவே இருந்தது. ம.பி.யில் 6, ராஜஸ்தானில் 2 தொகுதிகளில் வென்ற பகுஜன் சமாஜ் கட்சி உடனடியாக நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் என மாயாவதி அறிவித்தார்.
ஆனால் அம்மாநிலத்தில் காங்.அரசு ஆட்சியமைத்த ஒரு சில நாட்களிலேயே மாயாவதி குடைச்சலை ஆரம்பித்து விட்டார். கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பாரத் பந்த் நடந்த போது அப்போது ஆட்சியில் இருந்த பா.ஜ.க. அரசு பகுஜன் கட்சியினர் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்கையும் வாபஸ் வாங்குமாறு நெருக்கடி கொடுத்துள்ளார்.
உடனே வாபஸ் வாங்காவிட்டால் இரு மாநில அரசுகளுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் வாங்கிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். ஏற்கனவே ராஜஸ்தான் அரசுக்கு ஆதரவு அளித்து வரும் சமாஜ்வாதி கட்சி, தனது கட்சி எம்.எல்.ஏ.வுக்கு உறுதியளித்தபடி அமைச்சர் பதவி வழங்காததால் ஆதரவை வாபஸ் பெறப்போவதாக அகிலேஷ் யாதவும் மிரட்டல் விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.