களைகட்டும் ஜல்லிக்கட்டு போட்டி: அரியலூரில் இன்று தொடங்கியது
2019ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி அரியலூர் மாவட்டத்தில் இன்று கோலாகலமாக தொடங்கயது.
தமிழகத்தில் மாபெரும் போராட்டத்திற்கு பிறகு, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கியதை அடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் ஆரவாரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், 2019ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. அதில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான இடங்களையும், தேதியையும் தமிழக அரசு அறிவித்தது. குறிப்பாக, ஜனவரி மாதம் 15ம் தேதி அவனியாபுரத்திலும், ஜனவரி 16ம் தேதி பாலமேட்டிலும், ஜனவரி 17ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று புத்தாண்டை முன்னிட்டு, தமிழனி பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு 2019ம் ஆண்டின் முதல் போட்டியாக அரியலூர் மாவட்டம் மலத்தான்குளத்தில் இன்று தொடங்கியது. போட்டியில், சுமார் 500 காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்கள் களத்தில் உள்ளனர்.