திருவாரூரில் மு.க.ஸ்டாலின் அல்லது செல்வியை போட்டியிட வைக்க சீனியர்கள் மும்முரம்- திமுகவின் அடேங்கப்பா வியூகம்!

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினையே போட்டியிட வைக்க சீனியர்கள் முயற்சிப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருவாரூர் தொகுதியில் தொடர்ந்து திமுக வெற்றி பெற்று வருகிறது. அத்தொகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 2 முறை போட்டியிட்டு அமோகமாக வெற்றி பெற்றார்.

அவர் மறைவைத் தொடர்ந்து ஜனவரி 28-ந் தேதி திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் நிறுத்தப்படலாம் என கூறப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் திருவாரூர் ‘தலைவரின்’ தொகுதி... அதனால் திமுகவின் தலைவராக இருக்கும் நீங்கள்தான் போட்டியிட வேண்டும் என மு.க.ஸ்டாலினிடம் அக்கட்சி சீனியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை மு.க.ஸ்டாலின் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லையாம்.

அதேபோல் திமுகவின் சீனியர்களில் சிலர், கருணாநிதி மகள் செல்வியை வேட்பாளராக இறக்கிவிடலாம் எனவும் வலியுறுத்தி வருகின்றனராம்.

ஆர்.கே.நகரில் டெபாசிட்டை இழந்த திமுக, திருவாரூரில் மு.க.ஸ்டாலினை நிறுத்தி அமோக வெற்றிக்கு வியூகம் வகுப்பது எதிர்க்கட்சிகளை அலறவிடுகிறதாம்!

More News >>