என் சாதி மக்களுக்குத்தான் முன்னுரிமை - சர்ச்சையை கிளப்பிய ராஜஸ்தான் பெண் அமைச்சர்!
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு சில நாட்களுக்கு முன்பு தான் பொறுப்பேற்றது. அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருப்பவர் மம்தா பூபேஷ்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர் அல்வார் என்ற இடத்தில் தனது சமூகத்தினர் நடத்திய பேரணியில் பங்கேற்று பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. என் முதல் முன்னுரிமை என் சாதி மக்களுக்குத்தான், மற்றவர்களுக்கு அப்புறம் தான் என்று பேசியுள்ளார்.
அமைச்சரின் இந்தப் பேச்சு ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.