மாயாவதி மிரட்டலுக்கு பணிந்தது ம.பி.அரசு - பகுஜன் கட்சியினர் மீதான வழக்கு வாபஸ்!

மத்தியப் பிரதேசத்தில் முந்தைய பா.ஜ.க. அரசால் எதிர்க்கட்சியினர் மீது அரசியல் பழிவாங்கும் நோக்கில் போடப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார்.

எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் உரிமைகளுக்காக கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பகுஜன் சமாஜ் கட்சியினர் பாரத் பந்த் நடத்தினர். அப்போது ம.பி.யில் ஏராளமான பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மீது அப்போதைய பா.ஜ.க. அரசு வழக்குகளைப் போட்டது.

இந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அரசுக்கு மாயாவதி கோரிக்கை விடுத்தார். வாபஸ் பெறாவிட்டால் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறப்போவதாகவும் மிரட்டல் விடுத்திருந்தார்.

இது குறித்து ம.பி.முதல்வர் கமல்நாத் கூறுகையில், பா.ஜ.க அரசில் பழிவாங்கும் நோக்கில் போட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது என ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்றுதான். பகுஜன் கட்சி மட்டுமன்றி காங். உள்ளிட்ட பிற கட்சியினர் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் உடனடியாக வாபஸ் பெறப்படும் என்றார்.

More News >>