அமெரிக்காவில் கார் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் உயிரிழப்பு - ஒரு வயது மகள் சிறுகாயத்துடன் தப்பினார்!
அமெரிக்காவில் நிகழ்ந்த சாலை விபத்தில் மின்னசோட்டாவில் வசித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
விபத்தில் அவருடைய ஒரு வயது குழந்தை லேசான காயத்துடனும், காரை ஓட்டிய கணவர் காயமின்றியும் உயிர் தப்பினர். அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் தமிழகத்தைச் சேர்ந்த செல்வம் பாபு ( வயது 36), அவரது மனைவி ரம்யா பாரதி( வயது 34), ஒரு வயது மகள் தியா ரா பாபுவுடன் வசித்து வருகின்றனர். திங்கட்கிழமை காலை ஒரு காரில் மூவரும் காமரூன் நகரிலிருந்து சென்று கொண்டிருந்தனர்.
திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச் சுவரில் மோதி அந்தரத்தில் பறந்து கீழே விழுந்தது. கீழே விழுந்த வேகத்தில் தலை குப்புற கவிழ்ந்த கார் பலமுறை குட்டிக் கரணம் அடித்து சின்னா பின்னமானது. விரைந்து வந்த மீட்புப் படையினர் காரின் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.
இதில் சீட் பெல்ட் அணிந்திருந்த செல்வம் பாபு எந்த வித காயமின்றி உயிர் தப்பினார். சீட் பெல்ட் அணியாமல் இருந்த அவருடைய மனைவி ரம்யா பாரதி காருக்குள்ளேயே உயிரிழந்திருந்திருந்தார். லேசான காயமடைந்த ஒரு வயது மகள் தியாரா பாபு சிகிச்சைக்காக கான் சாஸ் சிட்டி குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீட் பெல்ட் அணியாத தே ரம்யா பாரதியின் உயிரிழப்புக்கு காரணமாகி விட்டது.
இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியது.