குடும்பத்திற்கு ரூ. 1000 பொங்கல் போனஸ் - தமிழக அரசு
தமிழகத்தில் ரேசன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்பத்திற்கும் தலா ஆயிரம் ரூபாய் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தினார். அவரது உரையில், இந்த ஆண்டு பொங்கல் போனசாக ரேசன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இடைத்தேர்தல் நடைபெறும் திருவாரூர் மாவட்டம் தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் பொங்கலுக்கு இந்த போனஸ் வழங்கப்படும் என்றார்.
தமிழக வரலாற்றில் பொங்கலுக்கு இது மாதிரி அதிக பட்ச போனஸ் வழங்கப்படுவது இதுவே முதல் முறை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது பொங்கலுக்கு ரூ 100 மட்டும் இனாமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.