சட்டசபை: ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக, காங்., வெளிநடப்பு!
தமிழக சட்டசபையில் இருந்து திமுக, காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றும் முன்பு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் பேச முற்பட்டார்.
கஜா புயல் நிவாரணம், கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி.ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் மற்றும் ஸ்டெர்லைட், மேகதாது பிரச்னை குறித்து பேச முற்பட்ட ஸ்டாலினுக்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார்.
இதனையடுத்து ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக அரசு அனைத்து வகையிலும் தோல்வியடைந்த அரசு. தோல்வியடைந்த அரசு எழுதிக் கொடுத்ததை ஆளுநர் வாசிக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.
இதேபோல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.