ஐயப்பனை ரகசியமாக முதன் முறை தரிசித்த பெண்கள் யார்? - பரபரப்பு தகவல்கள்
சபரிமலை ஐயப்பனை இன்று அதிகாலை தரிசித்த இரு பெண்கள் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. பிந்து, கனகதுர்கா என்ற அந்த இரு பெண்களும் கேரளாவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள்.
40 வயதான இருவரும் கடந்த 24-ந் தேதியே போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்றனர். சன்னிதானத்திற்கு ஒரு கி.மீ. முன் மரக்கூட்டம் என்ற இடத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் இந்துத்வ அமைப்பினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பல மணி நேரமாக நடந்த போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியும் போராட்க்காரர்கள் கலையவில்லை. இதனால் பிந்துவும், கனகதுர்காவும் பாதுகாப்பாக திருப்பி அனுப்பப்பட்டனர்.
அப்போதே மீண்டும் ஒரு நாள் ஐயப்பனை தரிசிக்க வருவோம் என்று சவால் விட்டுச் சென்றவர்கள் இன்று ஐயப்பனை தரிசித்த 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட முதல் பெண்மணிகள் என்ற சிறப்பைப் பெற்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.