பெண்கள் தரிசனம்... ஐயப்பன் கோயில் நடை திடீரென அடைக்கப்பட்டதால் பரபரப்பு!
ஐயப்பன் கோயிலில் பெண்கள் இருவர் தரிசனம் செய்த தகவல் வெளியானவுடன் கோயில் நடை திடீரென சாத்தப்பட்டது.
இன்று அதிகாலை 3.45 மணிக்கு பிந்து, கனகதுர்கா ஆகிய இரு பெண்களும் ரகசியமாக ஐயப்பனை தரிசித்த தகவல் லேட்டாகவே வெளியானது.
இந்தத் தகவலை உறுதி செய்த சில நிமிடங்களில் ஐயப்பன் கோயில் நடை திடீரென சாத்தப்பட்டது. பெண்கள் நுழைந்ததை அடுத்து கோயிலை புனிதப் படுத்துவதற்காக நடை சாத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஐயப்பன் சன்னிதானத்திற்குள் பெண்கள் நுழைந்தால் அடுத்த நிமிடமே கோயில் கதவை இழுத்து மூடுவோம் சபரிமலை கோயில் தந்திரி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.