பேட்ட படத்தின் ஹிந்தி ரீமேக் டிரைலர் ரிலீஸ்!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் பேட்ட படத்தின் ஹிந்தி ரீமேக் டிரைலர் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்டது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் பேட்ட படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 10ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ரஜினியை தவிர, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, இயக்குனர் சசிகுமார், சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
அனிருத் இசையில் வெளியாகியுள்ள பேட்ட படத்தின் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது.
இதற்கிடையே, பேட்ட படத்தின் டிரைலர் தமிழில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், ரஜினியின் ஸ்டைலிஷ் லுக், பேசும் வசனங்கள் அனைத்தும் ரசிகர்களை ஈர்த்ததுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
பேட்ட படம் தமிழில் மட்டுமின்றி ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்படுகிறது. ஹிந்தி வர்ஷனுக்கான டிரைலர் இன்று மாலை 4 மணிக்கு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
<iframe width="677" height="381" src="https://www.youtube.com/embed/qcv1L5_-Y4U" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>