50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி! அமமுகவின் அதிரடி பிளான்

திருவாரூர் தொகுதிக்காக தனி திட்டங்களை வகுக்கத் தொடங்கிவிட்டார்கள் அமமுக தொண்டர்கள். ஆர்.கே.நகரைப் போல 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என அவர்கள் உறுதியாகப் பேசி வருகிறார்களாம்.

திருவாரூர் தொகுதியில் 2,58,687 வாக்காளர்கள் இருப்பதாக அறிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம். இதில் 1,27,500 ஆண்களும் 1,31,169 பெண்களும் அடக்கம். வெற்றியைத் தீர்மானிப்பவர்களாக தலித் மக்களும் முஸ்லிம் சமூக மக்களும் இருக்கின்றனர். ஆர்.கே.நகரைப் போலவே அடித்தட்டு மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய பகுதியாக இருக்கிறது. கருணாநிதிக்கு மட்டுமல்ல, எனக்கும் சொந்த ஊர் திருவாரூர் என தினகரன் பேசுவதை உற்று கவனிக்கிறார்கள் திமுகவினர்.

ஆர்கே.நகரைப் போல திருவாரூரிலும் தோல்வி கிடைத்துவிட்டால் ஸ்டாலின் இமேஜ், டேமேஜாகிவிடும் என்பதால் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆனால், தேர்தல் தொடர்பாக எந்தவித பதற்றமும் இல்லாமல் இருக்கிறார் தினகரன். இதைப் பற்றிப் பேசும் அக்கட்சியின் பொறுப்பாளர்கள், ' மறுபடியும் குக்கர் சின்னத்தின் மூலம் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். வேட்பாளராக காமராஜ் நிறுத்தப்படுவார். அவருக்கு அடுத்ததாக ரவிச்சந்திரன் என்பவரும் சீட் கேட்க இருக்கிறார்.

இதில் காமராஜ் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. உனக்குத்தான்யா சீட் என அவருக்கு வாக்குறுதி கொடுத்துவிட்டார் தினகரன். ஆர்கேநகரில் தினகரன் யாரென்றே தெரியாத மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள். அப்படியிருக்கும்போது, சொந்த மண்ணான திருவாரூரில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். அதற்காக ரகசிய திட்டம் தீட்டப்பட்டு வருகிறது' என்கிறார்கள்

 

More News >>