தினகரன் ஆதரவு கருணாஸ் எம்.எல்.ஏ. எடப்பாடியுடன் சந்திப்பு!
நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தினகரன் அணியிலிருந்து எஸ்கேப்பாகி முதல்வர் எடப்பாடியை சந்தித்துள்ளார்.
திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகர் கருணாஸ் தினகரன் ஆதரவாளராக இருந்து வந்தார். சில மாதங்களுக்கு முன் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்தும் வம்பில் மாட்டிக் கொண்டார்.
அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கருணாஸ், சபாநாயகருக்கு எதிராக கொடுத்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் அவருடைய எம்.எல்.ஏ. பதவி எந்த நேரத்திலும் பறிக்கப்படும் அபாயம் நீடிக்கிறது. இந்நிலையில் கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை திடீரென கருணாஸ் சந்தித்தார்.
பூங்கொத்து கொடுத்து புத்தாண்டு வாழ்த்தும் தெரிவித்த கருணாஸ், தமது தொகுதி வளர்ச்சி குறித்த கோரிக்கை மனுவையும் கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், தாம் சபாநாயகர் மீது கொடுத்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வாபஸ் பெற்று விட்டதாக தெரிவித்தார்.
திருவாரூர் இடைத்தேர்தல் நேரத்தில் கருணாஸ் எடப்பாடி பக்கம் சரணடைந்ததின் பின்னணியில் பல விஷயங்கள் நடந்துள்ளதாக அதிமுக வட்டாரத்திலேயே கிசுகிசுக்கப்படுக்கிறது.