மக்களவையில் தொடர் அமளி - அதிமுக எம்.பி.க்கள் 26 பேர் சஸ்பென்ட் !
மக்களவையில் மேகதா து அணை விவகாரத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.பி.க்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியதைக் கண்டித்து அதிமுக எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கடந்த சில நாட்களாக மக்களவையும், மாநிலங்களவையும் முடக்கப்பட்டு அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இன்றும் மக்களவையில் அவை நடவடிக்கைகள் இடையூறு ஏற்படுத்தினர். ரபேல் விமான ஊழல் முறைகேடு தொடர்பாக இன்று நடந்த விவாதத்தின் போதும் கூச்சல் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அதிமுக எம்பிக்களில் துணை சபாநாயகர் தம்பித்துரை, அதிமுக நாடாளு மன்றக் குழுத் தலைவர் வேணுகோபால் தவிர 26 அதிமுக எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார். அடுத்த 5 அமர்வுகளுக்கு 26 பேரும் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
இதேபோல் மாநிலங்களவையிலும் 5 அதிமுக எம்.பி.க்களை ராஜ்யசபாத் தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டார்.