நடிகையோடு ஊர்சுற்றிய தலைநகரத்து ஆளும்கட்சி அதகள புள்ளி! அண்டை மாநில ஆசிரமத்தில் நடந்த கூத்து!
சென்னை நகரின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் வர்த்தக பகுதி அது. தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் என எந்தப் பண்டிகை வந்தாலும் அந்தப் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
நாளொன்றுக்கு பல நூறு கோடி ரூபாய்கள் புழங்கக்கூடிய பகுதியாகவும் அது இருக்கிறது. விஷயம் இதுவல்ல.
இந்தப் பகுதியில் கட்டப்பஞ்சாயத்து, அடாவடிகளில் கோலோச்சும் ஆளும்கட்சியின் எம்எல்ஏ ஒருவர், புட்டபர்த்தியில் நடிகை ஒருவரோடு கூத்தடித்த விஷயங்கள், ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது.
கூவத்தூர் ஆபரேஷன் நடக்கும்போது, 'சத்தியமான' இந்த நபர் ஆடிய ஆட்டத்தால் தினகரனே கொஞ்சம் ஆடித்தான் போனார். இதன்பிறகு எடப்பாடி அரசாங்கத்தில் ஆட்டத்தை அதிகரித்துக் கொண்டார்.
தொகுதிக்குள் இருக்கும் ஆள் அரவமில்லாத இடங்களை வளைப்பது, காலியாக இருக்கும் வீடுகளை அபகரிப்பது, புதிய கட்டுமானம் நடந்தால் சதுர அடிக்குக் கமிஷன் என இந்த நபரின் ஆட்டத்தால், தொகுதிவாசிகளே பயத்தோடுதான் நாட்களைக் கடத்துகின்றனர்.
இவருடன் அடியாட்களாக சுற்றிக் கொண்டிருப்பவர்களால், இந்தப் பகுதியில் புதிய தொழில்களைத் தொடங்கக்கூட முடியாமல் தவிக்கின்றனர். திமுகவில் கோலோச்சும் பிரமுகரே கூட, இந்தளவுக்குச் செயல்பட்டதில்லையாம்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தியில் சத்தியமான அந்த ஆளும்கட்சி பிரமுகரும் புதிய பாதை காட்டிய நடிகை ஒருவரும் கட்டுப்பாடில்லாமல் சுற்றியுள்ளனர்.
சாயிராம் ஆசிரமத்தில் உள்ள ஏ பிளாக்கில் இருவரும் தங்கியுள்ளனர். அப்போது வேறு சிலரால் சில சங்கடங்களும் ஏற்பட்டுள்ளன. இதையெல்லாம் தன்னுடைய அடாவடியால் அடக்கிவிட்டார் அதிமுக புள்ளி.
' நடிகையுடன் ஊர் சுற்றிய சத்தியம்' என தொகுதிமக்கள் போஸ்டர் அடிக்காத குறையாக கிசுகிசுக்கிறார்களாம்.
-அருள் திலீபன்