கண்மூடித்தனமாக போலீஸ்காரர் சுட்டதில் 3 பேர் பலி
மும்பை: மகாராஷ்டிராவில் ரிசர்வ் படை போலீஸ்காரர் ஒருவர் நடத்திய கொலைவெறி தாக்குதலில் துப்பாக்கி தோட்டா பாய்ந்து மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள மோரி சவுக் பகுதி வழியாக வந்த இரண்டு பேர் மீது ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றும் வீரர் ஒருவர் இன்று கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதில், இருவரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அங்கிருந்து 15 நிமிடங்களுக்குள் போர்வாக் நகர் பகுதிக்கு சென்ற அதே போலீஸ்காரர் அங்கு மேலும் ஒருவரை சுட்டுக் கொனந்றுவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், வழக்கு பதிவு செய்துள்ள புனே போலீசார் கொலையாளியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.